கையேடுகளின் 20% விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி
தமிழகத்தில், பள்ளிகள், 3ம் தேதி திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு, நோட்ஸ் புத்தகம் தவிர்த்து, மற்றவை, அரசு சார்பில் வினியோகிக்கப்படுகிறது.இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், பாடங்களுக்கான, நோட்ஸ் புத்தகத்தை, கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனைத்து பாடங்களுக்கும், தற்போது நோட்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இந்த நோட்ஸ் புத்தகங்கள், கடந்த கல்வியாண்டில், 120 - 290 ரூபாய்க்கு விற்கப்பட்டன.நடப்பு கல்வியாண்டில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, புதிய பாடத் திட்டம் போன்றவற்றால், 20 சதவீதம் வரை, தயாரிப்பு நிறுவனங்கள், நோட்ஸ் புத்தகத்தின் விலையை உயர்த்தியுள்ளன.
கையேடுகளின் 20% விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி
Reviewed by Rajarajan
on
13.6.19
Rating:
கருத்துகள் இல்லை