Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மனம் தளராத அரசுப்பள்ளி மாணவி ஜீவிதா, நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்று சாதனை...





அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த தையல் தொழிலாளி மகள் ஜீவிதா . 2019 20 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 15 லட்சத்திற்கு அதிகமானோர் தேர்வு எழுதினர். நீட் தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. தமிழ்நாட்டில் 48.5 % மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.  


சென்னையை சேர்ந்த தையல் தொழிலாளி மகள் ஜீவிதா அரசு மேல்நிலைப் பள்ளியில் அனகாபுத்தூர் பள்ளியில் பிளஸ் 2 ல் கடந்த ஆண்டு 1161 மதிப்பெண் பெற்றுள்ளார். சிறுவயது முதலே ஜீவிதாவிற்கு மருத்துவராக வேண்டும் என விரும்பியிருந்தார். ஒரு முழு ஆண்டு நீட் தேர்வு இருக்கிறது தயார்படுத்திய ஜீவிதா டியூஷனில் நீட் படிக்க வசதி இல்லாத காரணத்தால் சில மாதங்களிலேயே நின்றுவிட்டார். ஆனால் ஜீவிதா முயற்சியை தளரவிடாமல் நண்பர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்று தன்னை தயார்படுத்திக் கொண்டார். இன்று ஜீவிதா இந்திய அளவில் 6 678 வது இடத்தை பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண் எடுத்து உள்ளார். ஓபிசி பிரிவில் 2318 அவர் இடத்தை பிடித்துள்ளார். 

ஜீவிதாவின் தந்தை பன்னீர்செல்வம் தையல் தொழிலாளி ஜீவிதா உடன் பிறந்த சகோதரிகள் இரண்டு பேர். தனது தந்தையின் வருமானத்தில் எவ்வாறு படிப்பை தொடர இயலும் என்று நினைக்காமல் கடுமையாக உழைத்து இன்று நீட் தேர்வில் வெற்றி கண்டுள்ளார். ஜீவிதாவின் தாயார் கூறுகையில் சிறு வயது முதல் மருத்துவராக வேண்டும் என ஜீவிதா கூறுவார் அதற்கு நன்றாக படித்தால் மருத்துவராகலாம் மற்றபடி எங்களால் செலவு எதுவும் செய்ய முடியாது என கூறி வந்ததாக தெரிவித்துள்ளார். இதை ஜீவிதா வைராக்கியமாக கொண்டு நல்ல முறையில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 




இதனிடையே ஜீவிதா கூறுகையில் எனது தந்தையார் ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். குறைந்த வருமானத்தில் என்னை படிக்க வைத்தார். ஏழ்மை குடும்பத்தில் நான் மருத்துவர் ஆக முடியுமா என பல நாட்கள் நினைத்து உள்ளேன். என் அப்பா  அம்மா மற்றும் ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். இதன்விளைவாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் பிளஸ் டூ படிக்கும் பொழுது நீட் தேர்வுக்கான புத்தகங்களை நண்பர்களிடம் பெற்று படித்து வந்தேன் வந்தேன். ஒரு ஆண்டாக கடுமையாக முயற்சி செய்து இன்று நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
மனம் தளராத அரசுப்பள்ளி மாணவி ஜீவிதா, நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்று சாதனை...  மனம் தளராத அரசுப்பள்ளி மாணவி ஜீவிதா, நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்று சாதனை... Reviewed by Rajarajan on 8.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை