Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் சம்பள உயர்வு கேட்டு அரசிடம் கோரிக்கை


தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சுமார் 5,100 கெளரவ விரிவுரையாளர்கள்பணியில் உள்ளனர். மற்றவர்களைப் போலவே உழைக்கும் இவர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது பற்றி எந்த அறிகுறியும் தெரியவில்லை என தமிழக கெளரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த வெங்கடேசன் தங்கராஜ் கூறுகிறார்.

கெளரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கடந்த ஜனவரியில் உயர்த்தியுள்ளது. ஒரு பாடத்திற்கு ரூ.1,500 வீதம் அதிகபட்சம் ரூ.50,000 வரை சம்பளம் வழங்க அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பாக ஜனவரி 2010ல், அப்போதைய சம்பளம் ரூ.25,000 வரை அதிகரிக்கப்பட்டது.



ஊதிய உயர்வுக்கான அறிவுப்புகள் வந்தாலும் அவை நடைமுறைக்கு வரவில்லை என தங்கராஜ் தெரிவிக்கிறார். "கேரள அரசு யுஜிசி அறிவுறுத்தியபடி சம்பள உயர்வை அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாடுதான் இன்னும் செய்யவில்லை. வெறும் 15,000 ரூபாய்தான் கொடுக்கப்படுகிறது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடைசியாக தமிழக அரசு கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை 2016ஆம் ஆண்டில் மாற்றியது. ரூ.10,000லிருந்து ரூ.15,000 ஆக்கியது. 



இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா கூறுகையில், "நிரந்தரத் தீர்வு காண துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை நிரந்திர ஊழியர்களாக்கும் திட்டத்தையும் ஆலோசித்து வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.


"யுஜிசி நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஒரேபோல சம்பளம் வழங்கப்படுகிறது." என திருவண்ணாமலை அரசு கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த கெளரவ விரிவுரையாளர் ஒருவர் கவலை தெரிவிக்கிறார்.

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் சம்பள உயர்வு கேட்டு அரசிடம் கோரிக்கை அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் சம்பள உயர்வு கேட்டு அரசிடம் கோரிக்கை Reviewed by Rajarajan on 1.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை