கல்விக்கு முதல் கையெழுத்து போட்ட பிரதமர்: ஸ்காலர்ஷிப் உயர்வு!
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக பிரதமரின் கல்வி உதவித்தொகை உயர்த்தி கையெழுத்திட்டுள்ளார். 17வது மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா மே30ஆம் தேதி (நேற்று) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் தான் பதவியேற்றதும் முதல் கையெழுத்தை கல்வித்துறைக்காக இட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதல் நிதியை பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 2000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாகவும் மாணவிகளுக்கான மாதாந்தி உதவித்தொகை 2250 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாநில காவல்துறையினரும் பயனையும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.நக்சல்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களால் உயிர்த் தியாகம் செய்த மாநில காவல்துறையினரின் குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் பலன் கிடைக்கும். மாநில காவல்துறையினருக்கான இந்த ஊக்கத்தொகை ஆண்டுக்கு 500 பேருக்கு ஒதுக்கப்படும்.
கல்விக்கு முதல் கையெழுத்து போட்ட பிரதமர்: ஸ்காலர்ஷிப் உயர்வு!
Reviewed by Rajarajan
on
1.6.19
Rating:
கருத்துகள் இல்லை