அதி தீவிர அனல் காற்று சில நாட்களுக்கு வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள வானிலை மையம், மேற்கத்திய காற்று வலுவாக வீசுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலுர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 4 முதல் 6 டிகிரி வரை, வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.
அதி தீவிர அனல் காற்று சில நாட்களுக்கு வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை.
Reviewed by Rajarajan
on
17.6.19
Rating:
Reviewed by Rajarajan
on
17.6.19
Rating:


கருத்துகள் இல்லை