Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டம் படி இந்தி கட்டாயமா...? என்ன கூறுகிறது இந்த வரைவு...


தேசிய கல்வி கொள்கையானது 1986-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கல்வி கற்க வழிவகை செய்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை வரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட நிபுணர்கள்   புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்துள்ளது.

அந்த வரைவு திட்டத்தில் தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது, தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளை மூன்றாவது மொழியாக கற்பிக்கலாம் என்றும், மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.யோகா, நீர்மேலாண்மை, அரசியல் ஆகியவை குறித்தும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக https://mhrd.gov.in இணையதளத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை, nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டம் படி இந்தி கட்டாயமா...? என்ன கூறுகிறது இந்த வரைவு... புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டம் படி இந்தி கட்டாயமா...? என்ன கூறுகிறது இந்த வரைவு... Reviewed by Rajarajan on 2.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை