நாளை பள்ளிகள் திறக்கப்படுமா? கடும் வெயில் காரணமாக திறப்பதை தள்ளி வைக்க கோரிக்கை..
தமிழகத்தில் கடுமையான வெயில்,குடிநீர் தட்டுப்பாட்டுக்குஇடையே தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது. கத்திரி வெயில் காலத்தில் மட்டுமல்லாது கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.கத்திரி வெயில் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. பல இடங்களிலும் 100டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது.
பருவமழை காலத்தில்சரிவர மழை பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர்பஞ்சம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. சென்னை நகரில் தண்ணீருக்காக குடங்களுடன் மக்கள் அலையும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளை(ஜுன் 3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடும்வெயில்,தண்ணீர் பஞ்சம் உள்ளநேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள்தெரிவித்து வருகின்றனர். புதிய பாடத்திட்டத் இன்படி உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளதால் விரைவாக பள்ளிகளை திறப்பது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாறிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயில் காரணமாக தனியார் பள்ளிகள் நாளை பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கநிர்வாகிகளும் குழந்தைகள் கடும் வெயிலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும்என்று அரசுக்குகோரிக்கை வைத்துள்ளனர்.
நாளை பள்ளிகள் திறக்கப்படுமா? கடும் வெயில் காரணமாக திறப்பதை தள்ளி வைக்க கோரிக்கை..
Reviewed by Rajarajan
on
2.6.19
Rating:
கருத்துகள் இல்லை