ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு, இரண்டாம் வகுப்பு பாடபுத்தகத்தில்
புதிய பாட புத்தகத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யாசின் என்ற சிறுவனின் குறிப்பு இடம்பெற்றுள்ளது. சிறுவன் யாசின் சாலையில் இருந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்து பாராட்டுக்களை பெற்றான். இதனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதோடு இல்லாமல் சிறுவனின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இரண்டாம் வகுப்பு பாடபுத்தகத்தில் சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆத்திச்சூடி நேர்பட ஒழுகு என்ற தலைப்பின் கீழ் நேர்மையைப் பற்றி விளக்கும் விதமாக யாசின் சிறுவனின் நேர்மையை பிற மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் அவனது புகைப்படத்துடன் பாடப்பகுதியில் வெளிவந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு, இரண்டாம் வகுப்பு பாடபுத்தகத்தில்
Reviewed by Rajarajan
on
9.6.19
Rating:

கருத்துகள் இல்லை