மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மட்டுமே இனி ஆசிரியர் வாய்ப்புகள் இனி வழங்கப்படும் கல்வி அமைச்சர்
தமிழக கல்வி அமைச்சர் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெத்தம்பாளையம் கிராமத்தில் இந்திய விமானப்படை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்து திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்வியமைச்சர் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மட்டுமே ஆசிரியர் பணி வாய்ப்புகள் இனி வழங்கப்படும் என்றும், கூடுதலாக 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2142 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் மட்டுமே உள்ளதாகவும், இரண்டு மூன்று மாணவர்கள் மட்டுமே இருக்கும் பள்ளிகளை வைத்து எப்படி அரசு, பள்ளிகளை நடத்துவது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் பணியில்லை என தெரிவித்துள்ளார். மேலும் 7000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மட்டுமே இனி ஆசிரியர் வாய்ப்புகள் இனி வழங்கப்படும் கல்வி அமைச்சர்
Reviewed by Rajarajan
on
6.6.19
Rating:
கருத்துகள் இல்லை