மருத்துவ மாணவர்களுக்கு மனஅழுத்தத்தைப் போக்க 24 மணி நேர சிறப்பு உதவி மையம்
சமீபத்தில் மும்பையில் ஒரு மருத்துவமனையில் மூத்த மருத்துவர்களின் ஜாதி ரீதியிலான தொல்லை பொறுக்காமல் பாயல் தத்வி ((Payal Tadvi)) என்ற மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்று மருத்துவ மாணவர்களே தற்கொலை செய்து கொள்ளக் கூடிய எண்ணம் தவறானது. சமுதாயத்தில் மற்றவர்களுக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க கூடிய, இவர்கள் இது போன்ற மன அழுத்த பிரச்சனைகளில் இருந்து விடுபட சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. இது போன்ற பிரச்சனைகளை எதிர்காலத்தில் தடுக்கவும் மருத்துவ மாணவர்களின் மன அழுத்தம் குறைக்கவும் டாக்டர்ஸ் ஃபார் டாக்டர்ஸ் என்ற திட்டத்தின் மூலம் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் இயங்கும். இந்த சிறப்பு உதவி மையம் தொடங்க இந்திய மருத்துவ சங்கம் நிர்வகிக்க திட்டமிட்டுள்ளது.
மருத்துவ மாணவர்களுக்கு மனஅழுத்தத்தைப் போக்க 24 மணி நேர சிறப்பு உதவி மையம்
Reviewed by Rajarajan
on
6.6.19
Rating:
கருத்துகள் இல்லை