D.TED தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்துகொள்ள அறிவுறுத்தல்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஜூன் 7-ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் தொடக்க கல்வி பட்டயம் படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 14 முதல் துவங்கி 28 வரை நடைபெறுகிறது. முதலாம் ஆண்டு தேர்வு ஜூன் 15 முதல் துவங்கி 29 வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் இருந்து ஜூன் ஏழாம் தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
D.TED தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்துகொள்ள அறிவுறுத்தல்.
Reviewed by Rajarajan
on
6.6.19
Rating:
Reviewed by Rajarajan
on
6.6.19
Rating:


கருத்துகள் இல்லை