நர்சிங் படித்தவர்களுக்கு லேட்ரல் என்ட்ரி முறையில் MBSS சேர்க்கை வழங்க புதிய தேசிய கல்வி கொள்கை பரிந்துரை
லேட்ரல் என்ட்ரி முறையில் எம்பிபிஎஸ் சேர்க்கை வழங்க புதிய தேசிய கல்வி கொள்கை பரிந்துரை
சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டம் வெளியிடப்பட்டது. இந்த வரைவுத் திட்டத்தில் செவிலியர் மற்றும் பல் மருத்துவம் படித்தவர்கள் லேட்ரல் என்ட்ரி முறையில் எம்பிபிஎஸ் படிப்பில் நேரடியாக மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயில இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி ஒருவர் செவிலியர் கல்வி படித்துக்கொண்டிருக்கும்போது இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் நீட் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற பின்பு அவர் நேரடியாக மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்க்கையில் கல்வி பயில பரிந்துரை செய்துள்ளது.
இந்த முறை பிடிஎஸ் எனஅழைக்கப்படும் பல் மருத்துவர்களையும் எம்பிபிஎஸ் லேட்ரல் என்ட்ரி முறையில் மருத்துவம் பயில குழு பரிந்துரை செய்துள்ளது. நாடு முழுமைக்கும் போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் இந்த முறையை அமல்படுத்தலாம் என புதிய கல்விக் கொள்கை முன்வரைவு திட்டத்தில் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர் தேவி சஷ்டி தெரிவித்துள்ளார். இந்த முறையில் தேர்வாகும் நபர்கள் கட்டாயம் நீட் தேர்வு முறையிலேயே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
நர்சிங் படித்தவர்களுக்கு லேட்ரல் என்ட்ரி முறையில் MBSS சேர்க்கை வழங்க புதிய தேசிய கல்வி கொள்கை பரிந்துரை
Reviewed by Rajarajan
on
6.6.19
Rating:
கருத்துகள் இல்லை