Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

MBBS மற்றும் BDS மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் வினியோகம் துவங்கியது.

இந்த ஆண்டிற்கான  MBBS மற்றும் BDS படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org   இணைய தளங்களின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 



விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள 20 ஜூன் கடைசி நாளாகும். ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் அல்லது கீழ்க்கண்ட முகவரியில் THE SECRETARY, SELECTION COMMITTEE, 162, PERIYAR E.V.R. HIGH ROAD, KILPAUK, CHENNAI – 600 010  21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பின்பு முதல் வாரத்தில்  கவுன்சிலிங் தொடங்கும். 




இந்த ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடாக மருத்துவக்கல்லூரிகளில் சிறப்பு பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பதிவு மையங்கள் அரசு மருத்துவக்கல்லூரி செயல்படும் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் பொறியியல் கல்லூரிகளில் இந்த சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு அதிக அளவு பணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததால் ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது குழுவிடம் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.


MBBS மற்றும் BDS மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் வினியோகம் துவங்கியது. MBBS மற்றும் BDS மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் வினியோகம் துவங்கியது. Reviewed by Rajarajan on 7.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை