பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது
தமிழகம் முழுவதும் அரசு , அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிகழ்வுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது. இந்த பொறியியல் கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஜூன் மூன்றாம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.
தற்சமயம் சான்றிதழ் சரிபார்ப்பு சரிபார்ப்பு மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்று முதல் துவங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறும் சென்னையில் தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, பிர்லா கோளரங்கம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பின் போது மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், சிறப்பு தகுதி இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை சரிபார்க்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்த பின்பு, ஜூன் 17ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஜூன் 20 முதல் சிறப்பு பிரிவினரின் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 1 முதல் 28ம் தேதி வரை நடைபெறும்.
பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது
Reviewed by Rajarajan
on
7.6.19
Rating:
கருத்துகள் இல்லை