ஒரு நிமிடம் ப்ளீஸ்.. புதிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டம் என்ன கூறுகிறது-National Education Policy (NEP) .. இத்திட்டத்தால் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் என்ன தெரிந்துகொள்ளலாம்...
கடந்த சில வரங்களாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய கல்வி கொள்கை வரைவு திட்டம் இன்று பெரும் விவாதப் பொருளாக மாற்றப்பட்டு உள்ளது. பொதுவாக கல்வி கல்விக் கொள்கை என்பது எதிர்கால கல்வியின் செயல்பாடுகளை நினைக்கக்கூடிய ஒரு கட்டமைப்பு தான் இந்த கல்வி கொள்கை.
இந்த எதிர்கால கல்வியின் செயல்பாடுகள் மாணவர்களின் கற்றல் விளைவு இந்த சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் இவற்றை ஆராய்ந்து கல்வியாளர்களால் வடிவமைப்பு வடிவமைப்பு கூடியது. இந்த கல்விக் கொள்கை இதற்கான வரைவு திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த கல்விக் கொள்கையின் வரைவுத் திட்டத்தில் தலைவராக முன்னாள் இஸ்ரோ இயக்குநர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் தலைமையில் 11 பேர் கொண்ட குழு இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இந்த திட்டமானது பல கல்வியாளர்களிடம் இருந்து பெறக்கூடிய விமர்சனங்கள் மக்களிடையே பெறக்கூடிய விமர்சனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நடக்கக்கூடிய விவாதங்கள் அடிப்படையில் பல்வேறு திருத்தங்களோடு இறுதிவடிவம் பெறக் கூடியது. இதனை ஒரே நாளில் அமல்படுத்துவது கிடையாது. பலகட்ட விவாதங்களுக்கு பின்பே இது இறுதி வடிவம் பெற இருக்கிறது.
இந்த கல்வி கொள்கை வரைவு திட்டத்தை முக்கியமான பரிந்துரைகள் என்னவென்றால் - National Education Policy (NEP)
1)MHRD எனும் அமைச்சகம் இனி MoE கல்வி துறை அமைச்சகம் என்றழைக்கப்பட வேண்டும்.
2) பள்ளிகள் ப்ரீகேஜி எனப்படும் வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்.
3) கல்வி பெறும் உரிமை 3 வயது கடந்த 18 வயதுக்குள்ளான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப் படவேண்டும்.
4) 10+2+3 என்பதை மாற்றி அமைத்து 5+3+3+4 என்ற முறையில் அமைக்கப்பட வேண்டும்.
5) பாடங்கள் குறித்த சுமை குறைக்கப் படவேண்டும்.
6) வாழ்வியல் சார் பாடங்கள், துணை பாடங்கள், மற்ற பாடங்கள் என்பதில்லாமல் அனைத்துமே பாடதிட்டங்களாக கருதப்படவேண்டும். உதாரணமாக ஓவியம், இசை, விளையாட்டு என்பதையும் ஒருவர் பாடதிட்டமாக கொண்டு மதிப்பெண் பெற வழிவகை செய்யவேண்டும்.
7) தனியா ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் போன்றவை நிரந்தரமாக மூடிவிடுதல், இனி ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்களுக்கே ஆசிரியர் வேலை வாய்ப்பு. ஆசிரியர் பயிற்சி பல்கலை கழகங்கள் மாநிலம் தோறும் அமைத்தல்.
8) ஆசிரியர் பணியில் வாழ்க்கை கல்வி, வருங்கால உலகத்திற்கான கல்வி தரத்திற்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
9) 4 வருட B.Ed. ஆசிரியர் பணிக்கான அடிப்படை தகுதியாக அறிவித்தல்.
10) உயர்கல்வி ஆராய்ச்சி, புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மாற்றி அமைத்தல்.
11) ராஷ்ட்ரீய சிக்ஷா ஆயோக் என்ற அமைப்பை நிறுவி மாநில மத்ய கல்வி தரத்திற்கு இடையிலான வேறுபாடுகளை களைதல், ஒருங்கிணைத்தல்
12) தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்து காலத்திற்கேற்ப கல்வி முறைகளை மாற்றியமைத்தல்.
13) தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து நிதி பங்கீடு, அனுமதியளித்தல், கட்டுபடுத்தல், அரசின் கட்டுபாடின்றி, தன்னிச்சையாக செயல்படும் ஆணையமாக இயங்குதல்.
14) தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளை இணையாக மதித்தல்
15) தனியார் நடத்தும் கல்லூரி, பள்ளிகள் இலாபத்திற்க்காக இல்லாததை உறுதி செய்தல்.
16) மொழி, இன, பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்தல்
17) இந்திய மொழிகளை ஊக்கிவித்தல், பாலி, பெர்சியன், ப்ராக்ரித் மொழிகளுக்காக புதிய கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைத்தல்.
18) மொழிபெயர்ப்பு, மற்றும் அனைத்து மொழிகளுக்கான விளக்க உரைகள் தயாரிக்க தனி நிறுவனம் அமைத்தல்.
ஆனால் 17 உள்ள கருத்து, மூன்றாவது மொழி என்றவுடன் நாம் முதலில் புரிந்து கொள்வது இந்தியை, இந்தி மொழியை நம்மீது திணிப்பதாக தவறான புரிதல் காரணமாக இன்று மக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாற்றப்பட்டு உள்ளது.
இந்த வரைவு மூன்றாவது இந்திய மொழி என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் குறிப்பிடுகிறது. அதன்படி, எல்லா குழந்தைகளும் 8ஆம் வகுப்பு வரை தாய்மொழி, ஆங்கிலம் மற்றுமோர் இந்திய மொழியை கற்க வலியுறுத்துகிறது. இதனை தவறாக இந்தி திணிப்பு என்று புரிந்து கொள்கின்றோம்.
நமக்கு மற்றொரு கேள்வியும் எழலாம் இத்தனை மொழி படங்களை குழந்தைகள் கற்கும் பொழுது அவர்களின் கற்றல் பணியில் தொய்வு ஏற்படாத? ஆனால் அறிவியல் கூற்றுப்படி 3 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகள் எளிதில் தாய்மொழி தவிர்த்து மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ளும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
இந்த மூன்றாவது மொழியில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அப்படி இருக்க ஏன் நாம் தயங்க வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த கொள்கையின் படி அவர்கள் தமிழ் ஆங்கிலம் மற்றும் அவர்களுடைய தாய் மொழியில் கற்க இது வழிவகை செய்கிறது. அதே நேரத்தில் தமிழர்கள் இந்தியாவில் பிற மாநிலங்களில் வசிக்கும் போது அவர்களும் தமிழ் மொழியை கற்பதற்கு இந்த பரிந்துரை கட்டாயம் நன்மை பயக்கும்.
இந்த மூன்றாவது மொழிக் கொள்கைகள் நாடு முழுமைக்கும் ஆசிரியர் பணியில் கூடுதலான வேலைவாய்ப்பினை பெற வழிவகை செய்கிறது. தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பிற மாநிலத்தில் பணிபுரிய இது வழிவகை செய்யும் என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை. அதே போல் பிற மொழி ஆசிரியர்கள் தமிழகத்தில் வந்து பணிபுரியும் அது ஒரு வாய்ப்பாக அமையும். இந்தியாவில் தமிழகம் எப்பொழுதும் தனித்து இயங்கி வருகிறது என்பது நாம் அறிந்த உண்மை இந்த மும்மொழிக் கொள்கையால் நாம் நம்முடைய சிந்தனைகள் நல்ல எண்ணங்கள் பிறமாநில மக்களோடு எளிதில் இணக்கம் அடைய முடியும். இது தேசத்தின் வலிமைக்கும் ஒற்றுமைக்கும் வித்திடும் சமுதாயத்தின் நலனுக்கு நன்மை பயக்கும். சிந்திப்போம்...
Source
http://www.indiaeducation.net/indiaedudestination/policy/education-policy.aspx
ஒரு நிமிடம் ப்ளீஸ்.. புதிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டம் என்ன கூறுகிறது-National Education Policy (NEP) .. இத்திட்டத்தால் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் என்ன தெரிந்துகொள்ளலாம்...
Reviewed by Rajarajan
on
7.6.19
Rating:
கருத்துகள் இல்லை