Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கணினி பயிற்றுனர் TRB தேர்வை Online முறையில் நடத்தாமல் "OMR விடைத்தாளின் மூலம்" நடத்த வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..!!





TET, TRB, SLET, NET தேர்வுகளைப் போன்று கணினி ஆசிரியர்களுக்கான கணினி பயிற்றுனர் TRB தேர்வையும் OMR விடைத்தாள் (OMR Sheet) முறையில் நடத்திட வேண்டுமென்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது.

கடந்த மார்ச் 01-ஆம் தேதி 814 கணினி பயிற்றுனர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் "(http://trb.tn.nic.in )" வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச்-20 முதல் ஏப்ரல்-10 வரை ஆன்லைன் மூலம் TRB இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த TRB தேர்வானது வரும் ஜீன்-23 ஆம் தேதி Online முறையில் நடைபெறும் என்று TRB இணையதளத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நீண்ட வருடகாலமாக கணினி ஆசிரியர் பணியிடங்களை எதிர்பார்த்து காத்திருந்த பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகளுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.

ஆனால், இந்த தேர்வானது ஆன்லைன் (Online) முறையில் நடத்தப்படும் என்று கூறியிருப்பது கணினி ஆசிரியர்களிடையே பல குழப்பங்களையும், சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது.

ஏனெனில், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB Board) இதுவரை நடத்திய அனைத்து தேர்வுகளையும் எழுத்துப்பூர்வமாகவும், OMR விடைத்தாள் முறையிலும்தான் நடத்தியுள்ளது. ஆனால், கணினி ஆசிரியர்களுக்கான இந்த TRB தேர்வில் மட்டும் "Online" முறையைக் கையாள்வது கணினி ஆசிரியர்களுக்கு பாதகமான நிலையை உருவாக்கியுள்ளது.

ஏனெனில், இதற்கு முன்னர் நடத்தப்பட்ட Online தேர்வுகளின் முறைகேடுகளே இதற்கு சாட்சி. மேலும், ஆன்லைன் தேர்வுகள் வெளிப்பபடைத் தன்மையற்ற தேர்வுகளாகவும் உள்ளன.

ஏனென்றால், Online மூலம் தேர்வு நடைபெறும் பொழுது, தேர்வு மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு கேள்வித்தாள்கள் (Question Papers) எதுவும் வழங்கப்படுவதில்லை; மேலும், தேர்வர்கள் பதிலளிக்கும் விடைகளுக்கு "Corban Copy" போன்ற எந்தவொரு நகல்களும் வழங்கப்படுவதுமில்லை. இதனால், தேர்வு முடிந்து தேர்வறையை விட்டு வெளியே வந்த பிறகு எந்தெந்த வினாக்கள் தேர்வில் இடம்பெற்றன & எந்த வினாக்களுக்கு எந்த விடையை பதிலாக அளித்தோம் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் தேர்வு எழுதியவர்களிடம் இருக்காது.

மேலும், தேர்வு முடிந்த பின்னர் வெளியாகும் விடைக்குறியீடு (Answer Key) பெரும்பாலும் குழப்பத்தையே உருவாக்கும். இந்த அசாதாரண நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு தமிழக பள்ளி கல்வித்துறை -ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு OMR விடைத்தாளில் கணினி பயிற்றுனர் TRB தேர்வை நடத்திட பரிந்துரை செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த கணினி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் மாநில இணையதள ஆசிரியர் திரு.கு.ராஜ்குமார் கூறுகையில், நீண்ட வருடங்களுக்குப் பிறகு பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் -TRB தேர்வின் மூலம் தகுதியானவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க உள்ளது. இந்த கணினி பயிற்றுனர் TRB தேர்வை வெளிப்படைத் தன்மையுடன் நடத்திடவும், நியாயமான முறையில் எழுத்துத்தேர்வு நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென்பது ஒவ்வொரு கணினி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என கூறியுள்ளார்.

அனைவருடைய எதிர்பார்ப்பின் படி கணினி பயிற்றுனர் TRB தேர்வை OMR விடைத்தாள் முறையில் நடத்திட உரிய நடவடிக்கையை எடுக்குமா தமிழக பள்ளி கல்வித்துறை ??

செய்தி :-

கு.ராஜ்குமார், MCA., B.Ed.,
Cell : 9698339298
கணினி பயிற்றுனர் TRB தேர்வை Online முறையில் நடத்தாமல் "OMR விடைத்தாளின் மூலம்" நடத்த வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..!! கணினி பயிற்றுனர் TRB தேர்வை Online முறையில் நடத்தாமல் "OMR விடைத்தாளின் மூலம்" நடத்த வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..!! Reviewed by Rajarajan on 1.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை