Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.09.19

திருக்குறள்

அதிகாரம்:கூடாவொழுக்கம்

திருக்குறள்:276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

விளக்கம்

உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.

பழமொழி

Better cut the shoe that pinches the foot .

 துஷ்டனைக் கண்டால் தூர விலகி விடு.

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது இருப்பிடம் மற்றும் தெரு சுத்தமாக இருக்க முயல்வேன். எனது சுற்றத்தார் தெருவில் இருப்போரும் அவ்வாறு இருக்க வலியுறுத்துவேன்.

2. தூய்மை பாரதத்திற்கு என்னால் இயன்றதைச் செய்வேன்.

பொன்மொழி

அயராத உழைப்பு,தீராத வேட்கை,தெளிவான செயல்  இவைகளே வெற்றிக்கான விதைகள் ..

__டாக்டர் .சேயோன்

பொது அறிவு

1. சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படும் நாள் எது ?

செப்டம்பர் 8.

2. இந்தியாவில் கல்வியறிவு விகிதத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

 கேரளம்

English words & meanings

* Legumes : a plant mainly of pulses.
இருபுற வெடிக்கனி அல்லது லெகூம் (legume)
இருபுறமும் சமமாக பிளவுறும் தன்மையுடையது. வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைப்படுத்தும்.

* Label - a piece of paper which identify an object.
அடையாளச் சிட்டை

ஆரோக்ய வாழ்வு

உப்பு மற்றும் மிளகு இரண்டையும் அரைத்து பற்று போட்டால் தலைவலி மற்றும் ஒரு பக்க தலைவலி குணமாகும்.

Some important  abbreviations for students

* BD = Bangladesh

* BE = Belgium

நீதிக்கதை

பூனையும் எலியும்

ஒரு ஊரில் சக்தி என்றொருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான். பூனை வந்ததும் எலிகளால் முன்புபோல தானியங்களை திருட முடியவில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி. அதை நண்பனாக்கா வேண்டாம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாது. அதனால், நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது.

கிழட்டு எலி சொல்வதைக் கேட்டு, மற்ற எலிகள் வீட்டை காலி செய்தது. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் போகவில்லை. எப்படியாவது பூனையை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கிவிட்டது. ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்துவிட்டது. பூனையிடம் மாட்டிய எலி, பூனையாரே என்னை விட்டுவிடு. நான் உன் நண்பனாக விரும்புகிறேன்.

என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன். மேலும் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே கிடைக்கிறது என்று ஆசை வார்த்தைகள் கூறியது. பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும், காய்ந்த ரொட்டியும் போதுமானது. நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது கறியை இழக்க நான் முட்டாளில்லை என்று சொல்லி எலியைக் கொன்று ருசித்து சாப்பிட்டது.


நீதி :
எதிரிகளிடம் நியாயம் எதிர்பார்ப்பது தவறு.

இன்றைய செய்திகள்

09.09.2019

* சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து செலுத்தப்பட்டு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

* சென்னையில் இனி மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

* பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதவுள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்களையும் வரும் செப்.11-ஆம் தேதிக்குள் சேகரித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

* அமெரிக்க ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியில் முன்னணி வீராங்கனை செரீனாவை வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே பட்டம் வென்று அசத்தினார் இளம் வீராங்கனை பியான்கா.

* யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜாம்பவான் ரபேல் நடால்-ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் ஆகியோர் மோதுகின்றனர்.

Today's Headlines

🌸ISRO Chairman Dr. Shivan says the location of the Vikram lander which was sent by Chandrayan 2lost it's communication has been detected.

 🌸In Chennai, the corporation has announced a fine and imprisonment for placing advertisement banners and wires in trees.

 🌸The Department of Examination has instructed the Headmasters to collect all the details of the Plus Two Students who are going to write the public Examination and send  them to  Chief   Education Officer by
September 11 .

 🌸US Open women's singles final: 19-year-old Bianca Andreescu defeated Serena Williams in straight sets to earn her first Grand Slam title

 🌸US Open 2019 Men's Singles : Rafael Nadal is bidding for his 19th Grand Slam title in a tricky test against in-form Daniil Medvedev who is set to feature in his first-ever major final.

Prepared by
Covai women ICT_போதிமரம்
School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.09.19 School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.09.19 Reviewed by Rajarajan on 9.9.19 Rating: 5

கருத்துகள் இல்லை