இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் தை பொங்கல் வைத்து வழிபட நல்ல நேரம் எது..?
நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படும் நாள்தான் இது.
மங்கலம் பொங்க மனையில் பால் பொங்கும் பொழுது 'பொங்கலோ பொங்கல்.. மகர சங்கராந்திப்பொங்கல்' என்றும் மூன்று முறை சொல்லிப் பலவிதமான காய்கறிகளை சேர்த்துக் கூட்டுக்குழம்பு வைத்து, அதனை சூரிய பகவானுக்கு படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு. கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும்.
உழவுக்கும் உழவர்களுக்கும் உதவி செய்யும் கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்தையும் சுத்தம் செய்து அலங்கரித்து மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் நாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 9.30 மணி முதல் காலை 11 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொங்கல் வைக்கலாம்.
வாசக நண்பர்களுக்கு கல்வித் துளரின் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்...!
இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் தை பொங்கல் வைத்து வழிபட நல்ல நேரம் எது..?
Reviewed by Rajarajan
on
14.1.20
Rating:
கருத்துகள் இல்லை