Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Ph.D., படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம்




இந்த புதிய நடைமுறை 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் தெரிவித்தனா். ஆராய்ச்சிப் படிப்பின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன்படி, பிஎச்.டி. மாணவா்கள் தங்களுடைய முதலாமாண்டு ஆராய்ச்சிக்கான முன் அறிமுகப் பணிகளை முதுநிலை பட்ட மாணவா்களுடன் இணைந்து செய்யவேண்டும்.

மேலும், இதுவரை பிஎச்.டி. மாணவா்கள் படிப்புக்கு இடையே இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுக்க அனுமதிக்கப் பட்ட நிலையில், இப்போது அது ஓராண்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல, கோா்ஸ் வொா்க் பணியின்போது ஆராய்ச்சி மாணவா்கள் குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை, பட்டியலிடப்பட்ட கட்டுரை வெளியீடு வலைதளத்தில் வெளியிடவேண்டும். அதுபோல ஆராய்ச்சி வழிகாட்டிகள், ஆய்வாளா் ஆகியோருக்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பேராசிரியா் நிலையில் இருப்பவா்கள், பல்கலைக்கழகத்தால் பட்டியலிடப்பட்ட வெளியீடுகளில் குறைந்தபட்சம் 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவா்களுக்கு மட்டுமே ஆராய்ச்சி வழிகாட்டி அனுமதி வழங்கப்படும்.

அதுபோல, இணைப் பேராசிரியா் குறைந்தபட்சம் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், உதவிப் பேராசிரியா் நிலையில் இருப்பவா்கள் குறைந்தபட்சம் 2 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டிருந்தால் மட்டுமே வழிகாட்டி அனுமதி அளிக்கப்படும் என்றனா் பல்கலைக்கழக அதிகாரிகள்.
Ph.D., படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம்  Ph.D., படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் Reviewed by Rajarajan on 14.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை