அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு.! நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்துள்ளது.
பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்திய முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், நீட் தேர்வால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை மிக விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு.! நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
Reviewed by Rajarajan
on
5.1.20
Rating:
Reviewed by Rajarajan
on
5.1.20
Rating:


கருத்துகள் இல்லை