தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு! அரசு திட்டம்!
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் மூலம் ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் மளிகை பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் படி கடந்த மாதங்களில் ரேஷன் கடைகளில் கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு அரசு இலவசமாக மளிகை பொருட்களை மற்றும் நிவாரணத்தொகைகளை வழங்கியது. அதனை தொடர்ந்து ரேஷன் கடைகள் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் பனை வெல்லம் மற்றும் பயிறு வகைகள் வழங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் திமுக அரசு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. தற்போது ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக தலைமையிலான அரசு குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் வழங்காததை சுட்டி காட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற தேர்தலில் பெரும்பாலான வார்டுகளில் திமுக அரசு அமோக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தேர்தலின் வெற்றி பரிசாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை