பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு... மீண்டும் பள்ளிக்கு விடுமுறை
ராஜஸ்தானில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி, இதனால் மீண்டும் பள்ளி மூடப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்திலும் 10 முதல் 12-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஜோத்பூரில் உள்ள செயின்ட் பால் பள்ளியைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.. மேலும், பள்ளியில் பணியாற்று ஊழியர்கள் 2 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது தவிர, லுனி பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படிக்கும் 24 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இதையடுத்து, மூன்று நாட்களுக்கு அரசு பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தானில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன..
கருத்துகள் இல்லை