union budget 2022 பட்ஜெட் 2022-ன் சிறப்பு அம்சங்கள்
மத்திய பட்ஜெட்டை மக்களவையில் 11 மணியளவில் தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் 2022-ன் சிறப்பு அம்சங்கள்:
நடப்பாண்டுக்கான தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை.
வருமான வரி சோதனையின்போது கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளுக்கான சலுகைகள் ரத்து.
2025ஆம் ஆண்டுக்குள் 100% ஆப்டிக்கல் பைபர் நெட் வசதி அமைக்கப்படும்.
மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும்.
சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
உள்ளூர் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டம் வழங்கப்படும்.
அறுவடைக்கு பிறகு பயிர்க்கழிவுகள் எரிப்பதை தடுக்க திட்டங்கள் உருவாக்கப்படும்.
2030ஆம் ஆண்டுக்குள் சூரியஒளி மூலம் 280 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மூலதனச் செலவுகள் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மூலதனச் செலவுகள் 35.4% அதிகரித்துள்ளது.
பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிப்பு.
ராயல்டி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு சில விதிகளுக்கு உட்பட்டு வரி விலக்கு அளிக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14% ஆக உயர்வு ; கூட்டுறவு சங்கங்களுக்கான வரிகள் 15% ஆக குறைப்பு .
மத்திய அரசு ஊழியர்களை போலவே மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சலுகை அறிவிப்பு.
திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை 2 ஆண்டுகள் வரை தாக்கல் செய்யலாம்.
கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும்.
நாடு முழுவதும் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.
கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக கூடுதல் கல்வி தொலைக்காட்சிகள் தொடங்கப்படும்.
தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின்கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும்.
தேசிய சுகாதார திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு.
வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்.
நீர்ப்பாசன திட்டங்களுக்காக ரூ.8.7 லட்சம் கோடி ஒதுக்கீடு.
3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.
வடகிழக்கு மாநிலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.
மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு.
நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும்; அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
நில ஆவணங்களை கணினிமயமாக்கி, 'ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு' திட்டம் ஊக்குவிக்கப்படும்.
நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும் ; தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும்.
கருத்துகள் இல்லை