பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் திருப்புதல் தேர்விற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
தமிழகத்தில் பிப்ரவரி 9-ம் தேதி முதல் தொடங்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதன் படி, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பதிவு எண், வகுப்பு, பாடம் மற்றும் தேதியை மட்டுமே விடைத்தாளில் எழுத வேண்டும். விடைத்தாளில் பள்ளியின் பெயர் அல்லது முத்திரை இருக்கக்கூடாது. பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளும் தேர்வு நடைபெறும் நாளில் மையங்களில் இருந்து பொதுவான வினாத்தாள்களை சேகரிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு, இறுதி ஐந்து இலக்கங்கள்EMISஎண் மற்றும் ரோல் எண்ணின் மூன்று இலக்கங்கள் அவற்றின் பதிவு செய்யப்பட்ட எண்ணாக கொடுக்கப்பட வேண்டும்.
போன்ற பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் திருப்புதல் தேர்விற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
7.2.22
Rating:
கருத்துகள் இல்லை