தமிழக அரசு சார்பில் ரூ.25000 காசோலையுடன் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது
தமிழகத்தில் அரசு சார்பாக சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்க படுபவர்களுக்கு ரூ.25,000 காசோலையும் வழங்கப்படும்.
ஆசிரியர் விருது:
இந்தியாவில் சிறந்த ஆசிரியர்களை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாநிலங்களில் ஆசிரியர்கள் தேர்தெடுக்கப்படுவர் இருந்தும் அதே போல் அந்தந்த மாநிலங்களிலும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த நிலையில் தமிழகத்தில் அரசு சார்பாக சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அதில் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதினை வழங்குவதற்கு அறிவியல் நகரத்திற்கு அரசால் ஒப்பளிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறந்த ஆசியர்களை கண்டறியும் நோக்கிலும், அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் இவ் விருது வழங்கப்பட்டு வருகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்மற்றும், புவியியல், கணினி அறிவியல் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகளுக்கு 10 நபர்கள் தெத்தெடுக்கப்படுவர்.
இதில் ஐந்து விருதுகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மேலும் ஐந்து விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை www.sciencecitychennai.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆணையர், பள்ளிக்கல்வித் துறை வழியாக அறிவியல் நகரத்திற்கு 07.03.2022 மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
கருத்துகள் இல்லை