ஜூன் 13 பள்ளிகள் திறப்பு மற்றும் பல புதிய அறிவிப்புகளை அறிவித்தார் கல்வி அமைச்சர்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறுகையில், 2022-23 1 முதல் 10 வரை பள்ளிகள் ஜூன் 13 பள்ளிகள் திறக்கப்படும்.11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 பள்ளிகள் திறக்கப்படும்.12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில் வரும் கல்வி ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 3ஆம் தேதியும் பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கும் எனவும், டிசம்பர் 19 ஆம் தேதி 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி முடிந்து அதன் பின் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வர இருப்பதாகவும், அவ்வாறு வந்தால் காலை 8.30 மணிக்கு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் 9 மணி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 13 பள்ளிகள் திறப்பு மற்றும் பல புதிய அறிவிப்புகளை அறிவித்தார் கல்வி அமைச்சர்
Reviewed by Rajarajan
on
25.5.22
Rating:
கருத்துகள் இல்லை