மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை துவக்கம், ஆசிரியர்களுக்கு விடுமுறையா..?
கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. இரண்டு ஆண்டுகளுமே ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவடைகிறது. இதனால் மே 14-ஆம் தேதியிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி வரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு விடுமுறையா என கேள்வி எழுந்தது. குறிப்பிட்ட மாவட்டத்தை சார்ந்த கல்வி அலுவலர்கள் ஆசிரியர்கள் 20ம் தேதி வரை வரவேண்டும் என அறிவிப்பு வெளியீடு உள்ளார். இந்நிலையில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டுமா..? விதிமுறைகள் படி பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவித்த பின் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டியது இல்லை. ஆனால் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு மதிப்பீடு பணி மற்றும் தேர்வு முடிவுகள் ஒப்படைப்பு ஆகிய பணிகள் நிறைவு பெறும் வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.
ஆனால் சுழ்நிலை காரணமாக பள்ளிகளுக்கு வருகை புரிய வில்லை என்றால் அந்த நாளில் எந்த ஒரு வகையான விடுப்பு கோர வேண்டியது அவசியம் இல்லை. பள்ளியில் உள்ள பணிகள் நிறைவு செய்வதற்காக மட்டும் வருகை புரிய வேண்டும். ஆகவே ஆசிரியர்களுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை துவக்கம்.
மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை துவக்கம், ஆசிரியர்களுக்கு விடுமுறையா..?
Reviewed by Rajarajan
on
13.5.22
Rating:
கருத்துகள் இல்லை