Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு புதிய வழிமுறை அறிவிப்பு

 


ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியத்தை அரசு கருவூலம் மூலமாக வங்கிகளில் ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதங்களில் அரசு கருவூலத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டும்.


இந்த நடைமுறையை எளிதாக்க தமிழக அரசு தற்போது டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழை சமைப்பதற்கான புதிய வழிமுறையை அறிவித்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை இ சேவை மையங்களின் மூலமாகவோ அல்லது தபால் துறையின் மூலமாகவோ வாழ்நாள் சான்றிதழ் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். தபால் துறையில் இதற்கான கட்டணம் 70 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படி வண்டி சேவை அளிக்கும் தபால் நிலையங்களில் இந்த சேவையை ஓய்வூதியதாரர்கள் பெற முடியும். இந்த நடைமுறையானது நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாதவர்களுக்கு புதிய வழிமுறையை ஏற்படுத்தி தந்துள்ளது. G O No.136 dated 20.05.2022 Finance pension அரசாணையின் படி இனி, இந்த எளிதான நடைமுறையை பின்பற்றி ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.


அரசாணையை காண இங்கே கிளிக் செய்யவும் Download Govt Order Here



குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு புதிய வழிமுறை அறிவிப்பு குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு புதிய வழிமுறை அறிவிப்பு Reviewed by Rajarajan on 24.5.22 Rating: 5

கருத்துகள் இல்லை