பழைய ஓய்வூதி திட்டம் அமல்படுத்த வலியுறுத்தி பெருந்திரளான ஆர்பாட்டம்
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. திமுக ஆட்சி அமைந்து ஓராண்டாகி உள்ள நிலையில், இதுவரை பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்ற மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படி தனிநபர் ஒருவருக்கு 2 லட்ச ரூபாய் செலவாகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி தனிநபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் அரசு அலுவலர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பங்கேற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் மே 25 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
கருத்துகள் இல்லை