Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

விரைவில் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்குமா தமிழக அரசு..? ஊழியர்கள் கோரிக்கை

 மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த முறை மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு, அதாவது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்ட ஊதியம் ஆறு மாத காலத்திற்கு பிறகு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது.  




இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது. ஆனால்மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை வழங்கவில்லை. மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதனால் தங்களுக்கு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த தருவாயில் மத்திய அரசு மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 




தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை சிவகாசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். அதனால் அரசு இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

விரைவில் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்குமா தமிழக அரசு..? ஊழியர்கள் கோரிக்கை விரைவில் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்குமா தமிழக அரசு..?  ஊழியர்கள் கோரிக்கை Reviewed by Rajarajan on 14.5.22 Rating: 5

கருத்துகள் இல்லை