முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு கோடை விடுமுறை கிடைக்குமா...? அரசுக்கு கோரிக்கை
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து மே 14 முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. ஆனால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு 31ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு ஜூன் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் ஜூன் 17 வரை விடைத்தாள் திருத்தம் நடைபெறும். இதனால் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை கிடைக்காத நிலை உள்ளது.
எனவே உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை கிடைக்கும் வகையில் பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக அகவிலைப்படி உயர்வு ஊக்க ஊதிய உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு இழந்த நிலையில் கோடை விடுமுறையும் இல்லை நிலையில் ஏற்பட்டுள்ளது என்று வருத்தம் தெரிவித்து உள்ளார். மேலும் விடுமுறை கிடைக்காவிட்டால் நீண்ட தொலைவில் இருந்து வந்த பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த பந்தங்களோடு காண முடியாது என மன உளைச்சலில் இருப்பதாக கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை