கோடை வெயிலில் குழந்தைகளை வதைக்காமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
கோடை வெயிலில் குழந்தைகளை வதைக்காமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கோடை வெயிலில் குழந்தைகளை வதைக்காமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கத்தரி வெயில் காலத்திலும் இயங்கும். மே 13ஆம் தேதி வரை பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் கொளுத்தும் வெயிலில் பள்ளிகளை நடத்துவது மனித உரிமை மீறல் ஆகும். கொரோனா வைரஸ் முதல் அலை காரணமாக 2020- 21ஆம் கல்வியாண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. 2021-22 ஆம் கல்வியாண்டும் கொரோனா வைரஸ் பரவல் பாதிப்புக்கு தப்பவில்லை. இரண்டாம் அலை காரணமாக நடப்பு கல்வியாண்டு ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பரில்தான் தொடங்கியது. மூன்றாவது அலையால் மூடப்பட்ட பள்ளிகள் பிப்ரவரி மாதத்தில்தான் மீண்டும் திறக்கப்பட்டன. அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அதையே காரணம் காட்டி குழந்தைகள் பயிலும் வகுப்புகளுக்குக்கூட மே 13ஆம் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் பிடிவாதம் பிடிப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். துயரத்தையும், துன்பத்தையும் அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும் என்பர்.
அதேபோல் சுட்டெரிக்கும் வெயிலில் வகுப்புகள் நடத்தப்படுவதால் அனுபவித்து வரும் கொடுமைகளை மாணவர்கள் மட்டும்தான் அறிவார்கள். தமிழ்நாட்டில் 8 நகரங்களில் வெப்பநிலை 100டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து தகிக்கிறது. மே மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்கும் கத்தரி வெயில் காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை சென்னையில் 44 டிகிரி செல்சியசையும், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் 46 டிகிரி செல்சியசையும் தாண்டக்கூடும் என்று வானிலை ஆய்வு வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை