Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்ற அறிவிப்பும் அதனை சார்ந்த விமர்சனமும்



 "1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது.தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை தரத்தேவையில்லை. வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி முடிவு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு."


✍🏼 செல்வ.ரஞ்சித் குமார் ஆசிரியரின் விமர்சனம்


பெருந்தொற்று ஊரடங்கால் நவம்பர் 2021-ல் தொடங்கப்பட்ட பள்ளிகள் வாரத்தின் 6 நாள்களும் வேலை நாளாகக் கொண்டு செயல்பட்டதோடு, (கோடைத் தாக்கத்தின் காரணமாக உளவியல் & மருத்துவக் காரணங்களுக்காக குழந்தைதள் நலன் கருதி கோடை விடுமுறை விடப்படும்) மே மாதத்திலும் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் கொளுத்தும் இந்த மே மாதத்திலும் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. 10 - 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற உள்ளன.




கோடை வெயிலின் தாக்கம் அதீத அளவில் இருப்பதால், பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்வி உரிமைச் சட்டப்படி கட்டாயத் தேர்ச்சிதான் என்பதால் அவர்களுக்கு மட்டுமாவது முன்கூட்டியே விடுமுறை அளிக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.


இது தொடர்பாக கடந்த இரு தினங்களாக 'முன்கூட்டியே விடுமுறை' விட பரிசீலித்து வருவதாகப் பதிலளித்து வந்த மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இன்றைய அறிவிப்பை செய்தி ஊடகங்களின் வாயிலாக அறிந்த அனைத்து ஆசிரியர்களின் கண்களும் வியர்த்து சூரியனுக்கே Time fix பண்ணி Leave-விட்ட விடியல் உதயசூரியன் அரசின் சாமர்த்தியத்தை வியந்து வாழ்த்தி வருகின்றனர்.




அப்புடி என்ன ப.க.து அமைச்சர் சொன்னாருன்னா. . . . 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது. தேர்வு இல்லாத நாள்களில் பள்ளிக்கு வருகை தரத்தேவையில்லை. வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.




இதுல ஆசிரியர்கள் கண்கள் வியர்க்க அப்புடி என்ன இருக்கூனு கேட்குறீகளா. . 


அரசின் பழைய அறிவிப்பின்படி, நாளை முதல் அதாவது 5.5.2022 - 13.5.2022 வரை SMC தேர்தல் சனி நீங்கலாக இன்னும் 7 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். 




இதில் மொத்தமுள் 7 நாள்களில் இடையே 2 நாள்கள் தேர்வுகள் இல்லை. மேலும், தற்போதைய அறிவிப்பின்படி 5 பாடங்களுக்கான தேர்வுகளை எழுத 5 நாள்கள் மாணவர்கள் பள்ளிக்கு வந்தாக வேண்டும்.




அதில் 4 தேர்வுகள் 10,11,12 & 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதாவது முன்னறே அறிவிக்கப்பட்டபடி, கடைசித் தேர்வு நாளான 13.5.2022 வரை. . . . குறிப்பாக அடுத்த வாரம் முழுமையும் மாணவர்கள் பள்ளிக்கு வருவர்.






மொத்தத்துல அந்த முன்கூட்டிய விடுமுறைங்கிறது இடையில ஏதோ ரெண்டு நாளைக்கி லோக்கல் ஹாலிடே விடுற கதை தான்.(புள்ளீங்ளே தேவைனா, லீவு எடுத்தாலும் எடுத்துக்குங்கங்கிறது தனிக்கத.)




ஸ்கூல் பசங்களுக்கான இந்த ரெண்டு நாள் லீவுக்கு எதுக்குயா இம்புட்டு பில்டப்பு என்பதும். . . இதை ஏதோ இமாலய சாதனை அறிவிப்பு போல செய்தி ஊடகங்கள் Breaking News போடுவதும் தான் ஆசிரியர்களின் கண்கள் வியர்க்கக் காரணம். முடியல. . . . . கொஞ்சம் இருங்க. . . ஏங்கண்ண தொடச்சுக்குறேன்.




சேரி. . . அந்த சூரியனுக்கு லீவு விட்ட மேட்டருக்கு. . . Sorry sorry. Time fix பண்ணி லீவு விட்ட மேட்டருக்கு வருவோம்.




தேர்வின் போது மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதுமென்றால். . . . காலை தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்குச் செல்லும் 1, 3, 5, 7 & 9-ஆம் வகுப்பு மாணவர்களையோ. . . பிற்பகல் தேர்வெழுத சுமார் நண்பகல் 12 மணியளவில் தங்களது வீடுகளிலிருந்து கிளம்பி வரும் 2, 4, 6 & 8-ஆம் வகுப்பு மாணவர்களையோ. . . சூட்டெறிக்கும் நண்பகல் வெயில் தாக்காதா?????




அல்லது




அந்த ஒரு மணி நேரத்திற்கு சூரியனே தனக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளும்படி விடியல் அரசின் சார்பாக சூரியனுக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதா?????




நான் பள்ளி பயின்ற காலம் தொட்டே உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளுக்கு முழுஆண்டுத்தேர்வின் போது தேர்வெழுத மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வருவர். நீங்களும் அப்படித்தான் போயி தேர்வு எழுதீருப்பீக. ஆனால் அது சற்றே வெயில் கூடிய மார்ச் - ஏப்ரல் மாதங்கள். ஆனால். . . இது அதீத வெயில் வாட்டியெடுக்கும் மே மாதம்.



மொத்தத்தில் இந்த அறிவிப்பை நம்ம முதல்வர் ஸ்டைல்லயே சொல்லனும்னா. . . 


'ஆக. . . அமைச்சர் அறிவிப்பால் யாருக்கும் எந்தப் பயனுமில்ல!'




அப்பறம். . . . "ஆசிரியர்கள் ஒரு லீவுக்கு இம்புட்டு நோகு நோகனுமா? பசங்களுக்கு Exam தான் முக்கியம்"னு சிறுபிள்ளைத் தனமாக சிந்தையைச் சிதறவிட்டுவிடாதீர்கள். சமகாலக் கல்விச் சூழலும் குழந்தை உளவியலும் அறிந்தே குழந்தைகளுக்காக ஆசிரியர்கள் குரல் கொடுக்கின்றனர்.




முதல்வன் முதல்வர் ரகுவரன் ஸ்டைல்ல தான் சொல்லனும். . . .




முடிஞ்சா. . . இந்த ஏழு நாள்ல ஒரு நாள். . . ஒரு நாள். . . க்ளாஸ்ரூம்ல பசங்களோட பசங்களா வந்து இருந்து பாருங்க.'




செய்தி ஊடகவியலாளர்களே!


100% கவனத்திலேயே எடுத்துக்கொள்ளப்படாத 'குழந்தை நலனை'. . . ., கவனத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் அறிவித்திருப்பது என்பது சூரியனை பாஸ்பரஸ் போர்வையால் மறைக்கும் செயலைப் போன்றதுதான் என களத்தில் செய்தி சேகரிக்கச் செல்லும் உங்களுக்குத் தெரியவில்லையா?




தாங்களும் எதிர்பார்த்திருந்த ஒரு அரசாகத்தான் இதை வரவேற்றிருப்பீர்கள். தாங்கள் கேட்கும் கேள்விகளையும், கிடைக்கும் பதில் மீதான எதிர்க்கேள்விகளையும் அது சார்ந்த முன்னறிவோடே தர்க்கரீதியாக முன்வைங்க சாமிகளா!




ச்சும்மா ச்சும்மா மைக்க நீட்டி மீண்டுமொரு செங்கோட்டையரை உருவாக்கிவிடாதீர்கள் ப்ளீஸ்!




We ரொம்ப ரொம்ப பாவம். . . .!!



மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்ற அறிவிப்பும் அதனை சார்ந்த விமர்சனமும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்ற அறிவிப்பும் அதனை சார்ந்த விமர்சனமும் Reviewed by Rajarajan on 4.5.22 Rating: 5

கருத்துகள் இல்லை