புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்:
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.
* 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம்.
* டெல்லியைப் போல் தமிழ்நாட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்; ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
* கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பது போல நகரங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 25 மாநகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்.708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.
* உலகத்தரத்தில் கட்டமைப்பு தொய்வில்லாத தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 6 மாபெரும் இலக்கு அரசுக்கு உள்ளது. நிதி நெருக்கடி, ஒன்றிய அரசின் செயல்பாடுகள் நமது சேகத்தை குறைக்கிறது.
* தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி.
எந்நாளும் கழக ஆட்சி தான், கலைஞர் ஆட்சி தான் கூறி பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரை முடித்தார்
கருத்துகள் இல்லை