Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாத கால கோடை விடுமுறை அறிவிப்பு

 ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வரும் மே 14 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை 30 நாட்கள் கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 


தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கி இந்த மாதம் 28-ஆம் தேதி வரை அக்னி இருக்கும் என்றும், இயல்பை விட வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதாகவும், பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனிடையே மாணவர் பள்ளிக்கு தேர்வு எழுதும் நேரம் மட்டும் வந்தால் போதும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடுமையான கத்திரி வெயில் மாணவர்களை தேர்வு எழுத மட்டும் வந்தால் போதும் என கூறிய தமிழக அரசு தற்பொழுது ஒரு மாத காலம் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாத கால கோடை விடுமுறை அறிவிப்பு பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாத கால கோடை விடுமுறை அறிவிப்பு Reviewed by Rajarajan on 6.5.22 Rating: 5

கருத்துகள் இல்லை