TNPSC கட்டாய தமிழ் மொழி தகுதி தாளை எழுதுவதில் இருந்து விலக்கு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் 1, 2, 2ஏ போன்ற, இரண்டு நிலைகளை கொண்ட தேர்வுகளில், முதன்மை எழுத்துத் தேர்வில், கட்டாய தமிழ் மொழித்தாளானது தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. இதுபோன்ற தேர்வுகளில், கட்டாய தமிழ் மொழி தகுதி தாளை எழுதுவதில் இருந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 3, 4, 7 பி, 8 போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளில், தமிழ் மொழித் தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில், பல்கலைகளில் ஆங்கில மொழிப்பாடம் மட்டும் படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, தமிழ் மொழித்தாள் எழுதுவதில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு பதில், ரேங்கிங் மதிப்பீடு செய்வதற்காக, அவர்களுக்கென்று தனியாக பொது ஆங்கிலத் தேர்வு, பத்தாம் வகுப்பு பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும்.
இத்தேர்வுகளில் மொழி பெயர்ப்புப் பகுதி இடம் பெறாது. கட்டாய தமிழ் மொழித் தாளில் இருந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான விலக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மட்டுமின்றி, மாநிலத்தின் மற்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பொருந்தும்.
இவ்விலக்கு 40 சதவீதத்திற்கும் குறைவான குறைபாடுகளைக் கொண்ட, மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும். விலக்கு பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உதவி தொகையை ரொக்கமாக தர உத்தரவுமாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ், பட்டப் படிப்பு, டிப்ளமா படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய்; மற்றவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 50 சதவீதத் தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் முழுத் தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் என, முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். அதை நிறைவேற்ற, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை