எம்பிபிஎஸ் விண்ணப்ப படிவங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது மருத்துவ கல்வி இயக்குனரகம்
நீட் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சேர்வதற்கு விண்ணப்ப படிவங்கள் விரைவில் ஆன்லைனில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு மருத்துவ படிப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்ப படிவங்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த online விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிப்பதற்காக 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியாக மையம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் படிவங்கள் சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தில் மருத்துவ படிப்பு தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதற்கு உதவி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் விண்ணப்ப படிவங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது மருத்துவ கல்வி இயக்குனரகம்
Reviewed by Rajarajan
on
6.6.19
Rating:
கருத்துகள் இல்லை