இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் குளறுபடி விதிகளை மீறிய 400 ஆசிரியர் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளுக்கு உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து ஆசிரியர் சங்கம் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டு, அது உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்தப் அங்கன்வாடி மையங்களில் உள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கான ஆசிரியர் நியமிக்கும் பணியில் குளறுபடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் அப்பள்ளியில் ஜூனியராக இருக்கும் ஆசிரியர்கள் மாற்று பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்வது வழக்கம். ஆனால் விதிகளை மீறி மூத்த ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களுக்கு பணியமர்த்தப்பட்ட தாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் கூறியதாவது மூத்த ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டது தவறு எனவும், இளையவர்கள் தான் அவ்வாறு அரசு விதிகளின்படி மாற்று பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால் அனுபவம் மிக்க ஆசிரியர்களை அவ்வாறு பணியை மாற்றி தவறு என பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்கள் பணியிறக்கம் செய்யப்படவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் விதிமுறைப்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துளள்னர்.
இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் குளறுபடி விதிகளை மீறிய 400 ஆசிரியர் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
Reviewed by Rajarajan
on
7.6.19
Rating:
கருத்துகள் இல்லை