சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய ஆயுஸ் அமைச்சகம் மாநிலங்களுக்கு சுற்றிக்கை
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதற்காக மொத்தம் 154 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். இதனிடையே
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய ஆயுஸ் அமைச்சகம் மாநிலங்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘சித்த, ஆயுர் வேத மருத்துவப்படிப்புகளுக்கு கடந்த ஆண்டே நீட் தேர்வு அடிப்படையில் நடத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், அப்போது முதல்வர் பழனிசாமி தலைமையில் முடிவுகள் எடுக்கப்பட்டு பிளஸ் 2 அடிப்படையில் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் நீட் தேர்வுகள் விதிமுறைகள் அமலில் இல்லை. ஆனால், தற்போது அதற்கான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளோம். அதற்கு பதில் கிடைத்ததும் விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டு இளநிலை மருத்துவப்படிப்பில் 3 ஆயிரத்து 350 இடங்களும், முதுநிலை மருத்துவப்படிப்பில் 508 இடங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.’ இவ்வாறு கூறியுள்ளர்.
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய ஆயுஸ் அமைச்சகம் மாநிலங்களுக்கு சுற்றிக்கை
Reviewed by Rajarajan
on
1.6.19
Rating:
கருத்துகள் இல்லை