பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டினால் மற்ற பிரிவினருக்கு பாதிப்பு இல்லை சுகாதாரத்துறை அமைச்சர்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசு மருத்துப் படிப்பு மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி அந்த இட ஒதுக்கீடை வழங்கினாலும் ஏற்கெனவே இருக்கும் 69% இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு இருக்காது எனவும் கூறியுள்ளார்.
"மத்திய சுகாதாரத்தை தரப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி கேட்கப்பட்டது. அது பற்றிய கொள்கை முடிவை முதல்வரும் முதன்மைச் செயலாளரும் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்" எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டினால் மற்ற பிரிவினருக்கு பாதிப்பு இல்லை சுகாதாரத்துறை அமைச்சர்
Reviewed by Rajarajan
on
1.6.19
Rating:
கருத்துகள் இல்லை