சால்வைக்கு பதில் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்க எம்பி வேண்டுகோள்
தெலுங்கானா பாஜக எம்.பி ஜி கிஷன் ரெட்டி ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்.தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வைகளும் போக்கேகளும் தருவதற்கு பதிலாக நோட்டுபுத்தகங்களை வழங்குமாறு தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களுக்கு நன்கொடை வழங்குவதற்காக நோட்டுப்புத்தகங்கள் மற்றும் கதைப்புத்தகங்களுடன் எண்ணற்ற கட்சிப் பணியாளர்கள், ஆதரவாளர்கள், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் போன்றோர் எம்பி அலுவலகத்தில் திரண்டனர்.
இதுவரை 8,000 புத்தகங்களை சேகரித்துள்ளதாக 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' தெரிவிக்கிறது.இந்த நோட்டுப்புத்தகங்கள் தெலுங்கானாவில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கிஷன் தெரிவித்தார்.ஒவ்வொரு தலைவரும் இவரை முன்மாதிரியாகக் கொண்டு ஏழைகளுக்கு உதவ இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சால்வைக்கு பதில் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்க எம்பி வேண்டுகோள்
Reviewed by Rajarajan
on
8.6.19
Rating:
கருத்துகள் இல்லை