10ம் வகுப்பு தேர்வு அட்டவணை தயார் என்கிறார் செங்கோட்டையன்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளது, என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, முதல்வர் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளார். எந்த கல்வி நிறுவனங்களும், பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் உள்ளன. தேர்வு அட்டவணையும் தயார் நிலையில் உள்ளது. பொதுத் தேர்வுக்கான தேதியை, சூழலை பொறுத்து, முதல்வர் தான் முடிவு செய்து அறிவிப்பார். இவ்வாறு, அவர் கூறினார்.
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை தயார் என்கிறார் செங்கோட்டையன்
Reviewed by Rajarajan
on
26.4.20
Rating:
Reviewed by Rajarajan
on
26.4.20
Rating:


கருத்துகள் இல்லை