தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கும்? யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை!
கொரோனா அச்சுறுத்தலால் வரும் கல்வியாண்டில் செப்டம்பர் மாதத்திலேயே கல்லூரிகளைத் திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா அச்சுறுத்தி வருவதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், பள்ளிக் கல்லூரி திட்டமிட்டபடி ஜூன், ஜூலை மாதங்களில் திறக்கப்படுமா என்ற கேள்வி இருந்து வருகிறது.
தனிமனித இடைவெளி, சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடித்து வருவதன் காரணமாகத்தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்றே கட்டுக்குள் இருப்பதாக பலரும் கூறுகின்றனர். அப்படியிருக்கையில், கூட்டமாக மக்கள் சேரும் இடங்களை அடுத்த சில மாதங்களுக்காகவது தடை செய்ய வேண்டும் என பல வல்லுநர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக நிபுணர் குழுவை யுஜிசி அமைத்திருந்தது. இந்த நிபுணர்க் குழு பல்வேறு பரிந்துரைகளை யுஜிசிக்கு வழங்கியுள்ளது. அதில், வரும் கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கும்? யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை!
Reviewed by Rajarajan
on
26.4.20
Rating:
கருத்துகள் இல்லை