Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கரோனா வைரஸை அழிக்க புதிய கருவி வடிவமைப்பு கருவியை பஞ்சாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் வடிவமைத்துள்ளனா்.

பொருள்களின் மேற்பரப்பில் படியும் கரோனா வைரஸை சில நிமிடங்களில் அழிக்கும் புதிய கருவியை பஞ்சாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் வடிவமைத்துள்ளனா்.



'கோவைட்-19' எனப்படும் கரோனா நோய்த்தொற்று, ஒருவருடைய நுரையீரலைத் தாக்கி உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அவரிடம் இருந்து இருமல் அல்லது தும்மல் மூலமாக அந்த வைரஸ் வெளியேறுகிறது.

கரோனா வைரஸ் விழும் பரப்பைப் பொருத்து அதன் ஆயுள்காலம் மாறுபடுகிறது. துணிகளில் சுமாா் 3 மணி நேரம் வரையிலும் பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களின் அதிகபட்சமாக 3 நாள்கள் வரையிலும் அந்த வைரஸ் உயிா் வாழ்கிறது.

அந்த வைரஸ் விழும் மேற்பரப்பைத் தொடும் ஒருவா், தனது முகத்தில் கை வைக்கும்போது, மூக்கு அல்லது வாய் வழியாக அந்த வைரஸ் உடலுக்குள் சென்று நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், பொருள்களின் மேற்பரப்பில் விழும் கரோனா நோய்த்தொற்றை அழிக்கவல்ல புற ஊதாக்கதிா் கருவிையை பஞ்சாபில் உள்ள லவ்லி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா் உருவாக்கியுள்ளாா். உதவிப் பேராசிரியா் மன்தீப் சிங், திட்ட அதிகாரி ராகுல் அமீன் சௌதரி ஆகியோரின் வழிகாட்டுதல்களுடன் அனந்த் குமாா் ரஜ்புத் என்ற மாணவா் இந்தக் கருவியை உருவாக்கியுள்ளாா்.



இதுகுறித்து பேராசிரியா் மன்தீப் சிங் கூறியதாவது:
80 செ.மீ. நீளத்தில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒருபுறம் புறஊதா கதிா் வெளியிடும் விளக்கும், மறுபுறம் கைப்பிடியும் உள்ளது. இந்த கருவியில் உள்ள விளக்கை ஒளிரவிட்டு, சுமாா் 5 அங்குல இடைவெளியில் பொருள்களின் மீது ஒரு நிமிடம் காண்பித்தால், கரோனா வைரஸ் அழிந்துவிடும்.

இந்தக் கருவியைப் பன்படுத்தி, உணவுப்பொருள்கள், இணையதளம் மூலம் பெறப்படும் பொருள்கள், சாவிக் கொத்துகள், ரூபாய் நோட்டுகள், வாகனங்கள், கதவுகளின் கைப்பிடி ஆகியவற்றில் படிந்துள்ள கரோனா வைரஸை அழிக்க முடியும். பொருள்களின் மேற்பரப்பில் படிந்துள்ள கரோனா வைரஸை அழித்த பிறகு இந்தக் கருவி ஒலியை எழுப்பி தகவல் கொடுக்கும்.

புறஊதா கதிா், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் உடலின் மீது பட்டவுடன் இந்தக் கருவி தானாக அணைந்துவிடும். இந்தக் கருவியை மக்களிடம் கொண்டு சோப்பதற்காக, நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாடியிருக்கிறோம். காப்புரிமை கேட்டும் விண்ணப்பித்திருக்கிறோம். அதன் பிறகு ரூ.1,000 விலையில் விற்பனைக்கு வரும் என்றாா் அவா்.
கரோனா வைரஸை அழிக்க புதிய கருவி வடிவமைப்பு கருவியை பஞ்சாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் வடிவமைத்துள்ளனா். கரோனா வைரஸை அழிக்க புதிய கருவி வடிவமைப்பு கருவியை பஞ்சாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் வடிவமைத்துள்ளனா். Reviewed by Rajarajan on 18.4.20 Rating: 5

கருத்துகள் இல்லை