COVID-19 அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு நிறுத்தி வைக்க மத்திய நிதிஅமைக்கம் முடிவு .
COVID-19 அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு நிறுத்தி வைக்க மத்திய நிதிஅமைக்கம் முடிவு .
கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத DA தொகையை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தையும் பொருளாதார வீழ்ச்சியின் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய நிதிஅமைக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஓராண்டிற்கு DA (அகவிலைப்படி) உயர்வு நிறுத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரசு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப டிஏ வழங்கப்படுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு மிகக் கடுமையான கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மத்திய அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.
இந்த முடிவு 49.26 லட்சம் மத்திய அரசு ஊழியர்களைத் தவிர, 61.17 லட்சம் ஓய்வூதியதாரர்களையும் பாதிக்கும்.
முன்னதாக, அமைச்சர்கள், பிரதமர் (பிரதமர்), ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைப்பதாக அரசாங்கம் அறிவித்ததுகுறிப்பிடத்தக்கது.
COVID-19 அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு நிறுத்தி வைக்க மத்திய நிதிஅமைக்கம் முடிவு .
Reviewed by Rajarajan
on
23.4.20
Rating:
கருத்துகள் இல்லை