உலகிலேயே முதல் முறையாக கொரோனாவிலிருந்து பாதுகாக்க புதுமையான வழியை கண்டுபிடித்த பீகார் நபர்
உலகயே அச்சுறுத்தும் கரோனாவில் இருந்த தப்ப இந்தியாவில் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமலாகி வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.
அவ்வாறு செல்பவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் பிஹாரில் கரோனா குடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக மழைக்கும் பிடிக்கும் குடையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு அது உருவாகி உள்ளது.
இதன் பொத்தானை அமுக்கியவுடன் குடை விரிந்து திறக்கும். இத்துடன் குடையை சுற்றிலும் கால்வரை தொங்கியபடி பிளாஸ்டிக் காகிதமும் விரிந்தது விடும். அதேசமயம் குடையின் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்தும் தெளிக்கப்பட்டுவிடும்.
அதன் தேவை மேலும் வேண்டும் நிலையில் மற்றொரு முறை அதன் பொத்தானை அமுக்கி பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது அவரது பகுதியில் இளம் விஞ்ஞானி என்றழைக்கப்படுகிறார்.
உலகிலேயே முதல் முறையாக கொரோனாவிலிருந்து பாதுகாக்க புதுமையான வழியை கண்டுபிடித்த பீகார் நபர்
Reviewed by Rajarajan
on
3.4.20
Rating:
கருத்துகள் இல்லை