கொரோன வைரஸ் தாக்கம் எதிரொலி அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளம் பிடித்தம்; மக்கள் பிரதிநிதிகள் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்: கேரள முதல்வர்...!
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸின் தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்தார். நுகர்வோர் மாநிலம் என்ற வகையில் கேரளாவில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார். எனவே, பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டும் வகையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு அடுத்த ஒருவருடத்திற்கு மாத ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்றார்.
இதேபோன்று அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 6 நாள் ஊதியம் வீதம் அடுத்த 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் என்றும் பினராயி விஜயன் கூறினார். அதேநேரம், 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்தார்.
பொருளாதாரம் மேம்படும் பட்சத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை மீண்டும் திருப்பி வழங்க கேரள அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோன வைரஸ் தாக்கம் எதிரொலி அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளம் பிடித்தம்; மக்கள் பிரதிநிதிகள் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்: கேரள முதல்வர்...!
Reviewed by Rajarajan
on
23.4.20
Rating:
கருத்துகள் இல்லை