Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை! நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு!


Was
21 நாள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை தொடரும் என  பரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்கள்!

தற்போதைய சூழலில், ஊரடங்கு நீட்டிப்பும், கட்டுப்பாடுகளும் அவசியமாகிறது; அனைத்து நிலைகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவது அவசியம்.


Was
ஊரடங்கால் சிலர் தங்களது குடும்பங்களை பிரிந்து இருப்பதை உணர முடிகிறது; கொரோனாவை கட்டுப்படுத்துவதில், நாம் பயணிக்கும் பாதை சரியானது.

ஏப்ரல் 20 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும் 

அத்தியாவசிய பொருட்களின் தேவைகளுக்காக ஏப்.20ம் தேதிக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும்.

வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.

சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றுங்கள்.

ஏழை எளிய மக்களுக்கு உதவுங்கள்.

கொரோனா வைரஸ் கண்டறிய உதவும் ஆரோக்கிய செயலியை பயன்படுத்துங்கள்.

மருத்துவர், செவிலியர் மற்றும் காவல்துறையினர் கூறும் அறிவுரைகளை பின்பற்றவும்.

மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியினை பெறக்கூடிய உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொழிலாளர் யாரையும் வேலையை விட்டு நீக்கி விடாதீர்கள். 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களை மரியாதையுடன் நடத்தவும்.

கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமானது; தளர்வுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் நாளை வெளியிடப்படும் .

போன்ற முக்கிய அறிவிப்புகளை தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Was
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை! நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு! பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை! நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு! Reviewed by Rajarajan on 14.4.20 Rating: 5

கருத்துகள் இல்லை