கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதத்தில் பருவத் தேர்வு அதே மாதத்தில் தேர்வு; முடிவு

கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதத்தில் பருவத் தேர்வுகள் நடைபெறும் எனவும், அதே மாதத்தில் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் எனவும் உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெறும். மேலும், அதே மாதத்திலேயே முடிவுகளை வெளியிட உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.மேலும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கல்லூரி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்து கல்லூரிகள் திறந்த உடன் இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதத்தில் பருவத் தேர்வு அதே மாதத்தில் தேர்வு; முடிவு
Reviewed by Rajarajan
on
18.4.20
Rating:
கருத்துகள் இல்லை