பாடப் புத்தகங்கள் கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளை திறக்க, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
பாடப் புத்தகங்கள் கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளை மீண்டும் திறக்க, மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று முன்தினம் இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முழு அடைப்பு காலகட்டத்தில், மக்களின் சில அத்தியாவசிய தேவைகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், மேலும் சில சேவைகளை திறக்க வலியுறுத்தி, மக்கள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
இதை கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, மேலும் சில அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நகர்ப்புறங்களில் உள்ள, 'பிரெட்' தயாரிப்பு தொழிற்சாலைகள், மாவு, மில்கள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகள், மின் விசிறி மற்றும் மொபைல் ரீசார்ஜ் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது
பாடப் புத்தகங்கள் கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளை திறக்க, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
Reviewed by Rajarajan
on
26.4.20
Rating:
கருத்துகள் இல்லை